2008-12-31 20:18:03

அயர்லாந்தின் கர்தினால் ஷீன் பிராடி, அயர்லாந்தின் ஆர்மா மறைமாவட்டப் பேராயர் ஆலன் ஹார்ப்பர் , ஆகியோர் வெளியிட்டுள்ள தமது செய்தியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருப்பயணிகளாக நாம் இயேசு பிறந்த புனித பூமிக்குச் சென்றிருந்தோம் . காஜாவில் நடக்கும் வன்முறைபற்றி வருத்தத்தோடு இருக்கிறோம் . பகைமையை நீக்கி இஸ்ராயேலும் காஜாப்பகுதியினரும் உடனடியாகப் போரை நிறுத்தி நிரந்தரமாக அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் . வன்முறை ஓய்ந்தால்தான் அமைதிப்பேச்சுக்கு வழிபிறக்கும் எனப் பேராயர்கள் கூறியுள்ளனர் . வன்முறை நடக்கும் இடங்களில் அமைதிக்காகச் செபிக்குமாறு இறை மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். இஸ்ராயேலும் பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு நல்ல சமாதானத்தோடு வாழ அமெரிக்க ஐக்கிய நாடுகளையும் , ஐரோப்பியக் கூட்டுறவு நாடுகளையும் வழிசெய்யுமாறு கேட்டுக்கொள்வதாகச் செய்தியில் தெரிவித்துள்ளனர் .


இணையதளத்தை நாளும் பார்க்கும் இனிய நேயர்களே உங்கள் அனைவருக்கும் உரோமையிலிருந்து வத்திக்கான் வானொலி பூத்துச் சிரிக்கும் புத்தாண்டில் புத்துணர்வும் , புதுப்பொலிவும் புது வரங்களும் என்றும் உங்கள் வாழ்வை நிரப்ப வரங்கள் கோடியை வல்ல தேவனிடம் வேண்டி , வாழ்த்துக்கூறி மகிழ்கிறது . கன்னிமரியாள் கடவுளின் தாய் என்று நாம் அன்னைக்கு விழா எடுக்கும் பெருவிழா நாளில் , மனுவுரு எடுத்த இறைமகனாருக்கு இயேசு என்ற திருப்பெயர் சூட்டி மகிழ்ந்த விழாவையும் கொண்டாடும் நந்நாளில் ஆண்டவன் அருள் ஆசியை வான் மழையாகப் பெற்று மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கூறுகிறோம்.








All the contents on this site are copyrighted ©.