2008-12-28 20:39:28

ஆசியாவுக்கான ஆயர்கள் மன்றத்தின் அமர்வு – சிறப்பு அறிக்கை . 281208.


டிசம்பர் 11, 12 தேதிகளில் நடந்த ஆசியாவுக்கான ஆயர்கள் மன்றத்தின் சிறப்பு அமர்வில் வத்திக்கானின் ஆயர்கள் மன்றப் பொதுச் செயலர் மேதகு பேராயர் நிக்கோலா எத்தரோவிக் கலந்துகொண்டு தலைமை தாங்கினார் . இது அவர்களின் 12 ஆவது அமர்வாகும் . ஆசியாவில் தேவ அழைத்தல் அதிகரித்து வருகிறது . நற்செய்தி அறிவிப்பது மனித வள மேம்பாட்டுடன் இணைந்து செயலாக்கப்படுகிறது . இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய சமயங்களோடு கலந்துரையாடல் சவால்கள் உள்ளன . தீவிரவாதமும் , மதச் சுதந்திரம் மறுக்கப்படுதலும் , உலகோதயச் சிந்தனைகளால் பொருட்களைச் சேகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நற்செய்தி அறிவித்தலுக்குத் தடைகளாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தியாவின் ஒரிசாவிலும் , மும்பையிலும் , மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிலையான அமைதியும் நீதியும் தேசிய , அகில உலக உறவுகளில் இன்னும் காணப்படாதிருக்கிறது . பண்பாட்டு மயமாக்குதல் பற்றிக் கருத்துப் பரிமாறப்பட்டது . இந்தியப் பாரம்பரியத்தின் எளிமை , நல்ல குடும்ப உறவுகள் , விருந்தோம்புதல் , சமயப்பற்று மற்றும் தனித்திருந்து அமைதியாக தியானம் செய்தல் , ஒருமைப்பாட்டு உணர்வு , பற்றற்ற வாழ்க்கை நெறிமுறைகள், கடின உழைப்பு , ஒழுங்குக் கட்டுப்பாட்டுணர்வு போன்றவை போற்றப்பட்டன . பண்பாட்டு மயமாக்குதல் மிகவும் நுண்ணுணர்வோடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனத்திட்டமிடப்பட்டது . நற்செய்தி அறிவிப்பவர்கள் விவிலியத்தில் ஊன்றியிருத்தல் வேண்டும் . இந்திய தத்துதவ மற்றும் இறையியல் சிந்தனைகளையும் நன்கு கற்றிருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது . இதில் பொதுநிலையினர் , இறையியலார் பங்கு வலியுறுத்தப்பட்டது . பண்பாட்டு மயமாக்குதல் விவிலியத்தோடும் , அகில உலகத் திருச்சபையோடும் , திருச்சபைப் பாரம்பரியத்தோடும் இணைந்து மக்களின் விசுவாசத்தை மனதில் கொண்டு வழங்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.