2008-12-27 14:07:00

ஒருவரின் ஒருங்கிணைந்த ஆளுமையை நெறிப்படுத்துவதற்கான கூறுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு உண்மையான சுதந்திரத்தின் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும்


டிச.27,2008. ஒருவரின் ஒருங்கிணைந்த ஆளுமையை நெறிப்படுத்துவதற்கான கூறுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு உண்மையான சுதந்திரத்தின் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும் என்று டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழுவின் தலைவர் அருட்சகோதரர் அலாய் லாசர் கூறினார்.

2009ஆம் ஆண்டுக்கென அவர் எழுதியுள்ள கடிதத்தில் சோர்வு மற்றும் உதவியற்ற நிலையில் வாழ்வின் ஊற்று எங்கிருக்கிறது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர், கடந்த காலத்தைவிட இக்காலத்தில் பலர் இதனைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர், இறைவனின் பெயர்கூட புரிந்து கொள்ளாமையினாலும் ஏன் முழுவதும் மறந்த நிலையிலும் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் பிரசன்னத்திற்கு மிகுந்த கவனமுடன் இருப்பதன் மூலம் வாழ்வின் ஊற்றைக் கண்டுபிடிப்பதற்கானத் தடங்கல்களைத் தவிர்க்க முடியும் என்று அருட்சகோதரர் அலாய் லாசர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாம் யார் என்பதும் நாம் யார் இல்லை என்பதும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும், நாம் அன்பு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம், எதற்கும் காத்திராமல் நற்காரியங்களைச் செய்வோம் என்றும் அவரின் செய்தி கூறுகிறது.

இந்த டேஜே குழு, ஐரோப்பிய இளையோர்க்கென வருகிற திங்கள் முதல் ஜனவரி 2 வரை பிரசல்ஸில் மாநாட்டை நடத்தவுள்ளது. இதில் 17க்கும் 35 வயதுக்கும் உட்பட்ட நாற்பதாயிரம் இளையோர் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.