2008-12-23 16:58:31

புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அங்கு வாழும் யூதர்கள், முஸ்லீம்கள் என அனைவருமே அமைதியை விரும்புகின்றனர்


டிச.23,2008 புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அங்கு வாழும் யூதர்கள், முஸ்லீம்கள் என அனைவருமே அமைதியை விரும்புகின்றனர் என்று எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பேராயர் ப்போவாட் த்வால் கூறினார்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் அவரது கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி பற்றி பமிலியா கிறிஸ்தியானா என்ற இத்தாலியய வார இதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் பேராயர் த்வால்.

இஸ்ரேலின் காசா பகுதி ஆக்ரமிப்பு மற்றும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பேசிய அவர், பாலஸ்தீனாவில் கிறிஸ்தவர், முஸ்லீம்கள் என்ற பாகுபாடு கிடையாது, அனைவரும் ஒரேவிதமான துன்பங்களை எதிர்நோக்குகின்றனர் மற்றும் அமைதிக்காக ஏங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பாலஸ்தீன தேசிய அதிகாரத்திற்கான தேர்தல்கள் வருகிற ஜனவரியில் இடம்பெறவுள்ளவேளை, அரசியல் சூழல் மிகவும் சிக்கலானதாக மாறி வருகின்றது என்றும் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா கவலை தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.