2008-12-22 20:42:02

ஜிம்பாப்வேயில் காலரா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறுகிறது உலகச் சுகாதார அமைப்பு . 22 , டிசம்பர் .


கடந்த பல வாரங்களாக ஜிம்பாப்வேயில் பரவிவந்த காலரா இப்பொழுது சமநிலையில் இருப்பதாக ஹூ எனும் உலக நல அமைப்பின் காலராத் தடுப்புப் பணிகளின் மேற்பார்வையாளர் டாமினிக் லெக்ரோஸ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார் . நவம்பர் மாதம் வேகமாகப் பரவி வந்த காலரா நோய் டிசம்பர் மாதத்தில் அதே அளவு எண்ணிக்கையிலேயே காணப்பட்டது எனவும் அவர் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்தாக எப் ஈ என்ற இஸ்பானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது . டிசம்பர் மாதம் உச்ச அளவு எண்ணிக்கையை எட்டியபிறகு நோய் சமநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் . 1123 பேர் அங்குக் காலராவால் இறந்துள்ளார்கள் . 20,896 பேர் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .








All the contents on this site are copyrighted ©.