2008-12-22 20:03:38

ஒரிசாவில் கிறிஸ்துமஸ் சமயத்தில் போராட்டம் இராது என தீவிரவாதிகள் அறிவிப்பு . 22 , டிசம்பர் .


ஒரிசாவில் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் போராட்டம் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் விளம்பரப்படுத்தியிருந்தனர் . ஒரிசா மாநில முதலமைச்சர் தீவிரவாதிகளோடு கலந்து பேசியதால் அவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளப்போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன . காந்தமால் மாவட்டத்தில் அதிகப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணக் குமார் கூறியுள்ளார் . கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் டிசம்பர் 25 ஆம் தேதி அனைத்து ஊர்வலங்களையும் பேரணிகளையும் அரசு தடை செய்துள்ளது . ஒரிசாவின் கட்டாக் – புவனேசுவர் பேராயர் இரபேல் சீனத் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை இதற்கு முன்னர் கிறிஸ்துமஸ் விழாவுக்கு அதிகப் பாதுகாப்புக்குத் தருமாறு குழுவினரோடு சென்று கேட்டிருந்தார் . தற்பொழுது 4000 காவலர்கள் அங்குப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் . இன்னும் அதிகமான காவலர்கள் அங்கு பாதுகாப்புக்காக வர இருக்கிறார்கள் . ஒரிசாவில் 150 அமைதிக்கான பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குமார் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.