2008-12-20 15:59:04

பதினாறு வளரும் நாடுகளில் கிராமப்புற ஏழ்மையைக் குறைப்பதற்கான திட்டங்களுக்கென இப்பாட் நிதியுதவி


டிச.20,2008. பதினாறு வளரும் நாடுகளில் கிராமப்புற ஏழ்மையைக் குறைப்பதற்கான திட்டங்களுக்கென இப்பாட் என்ற ஐ.நா.வின் வேளாண்மை வளர்ச்சித்திட்ட சர்வதேச நிதி அமைப்பு புதிய நிதியை ஒதுக்கியுள்ளது ஏழ்மையைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதாக இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

ஏறத்தாழ இருபது கோடி டாலரைக் கடனாகவும், ஆறு கோடிக்கு மேற்பட்ட டாலரை வளர்ச்சித் திட்டங்களுக்கெனவும் வழங்குவதற்கு இப்பாட் இவ்வாரத்தில் உரோமையில் நடைபெற்ற கூட்டத்தில் இசைவு தெரிவித்தது.

கடும் வறுமையில் வாடும் காங்கோ ஜனநாயகக் கடியரசு, சுவாசிலாந்து, கென்யா உட்பட்ட 16 நாடுகளுக்கென இந்நிதி உதவி வழங்கப்படவுள்ளது







All the contents on this site are copyrighted ©.