2008-12-20 15:58:53

சீனாவில் மறைந்து வாழும் கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடபட்டுள்ளன


டிச.20,2008. கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் வேளை, சீன அதிகாரிகள் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் கிறிஸ்தவர்க்கெதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

கிறிஸ்தவர்களின் செப அறைகளை மூர்க்கத்தனமாகத் தாக்கியும், கிறிஸ்தவர்களை அடித்தும் அச்சுறுத்தியும் வருகின்றனர் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியது.

சீனாவில் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்நாட்டின் அநீதியான அதிகார அமைப்பை குறைகூறுவோர் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்று கூறும் அச்செய்தி நிறுவனம், மக்களின் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க முயற்சிப்பவர், இன்னும் அது குறித்து புகார்கள் எழுத முனைவோர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது, சிறையில் இருப்பவர்கள் சித்ரவதைக்கு உள்ளாகின்றனர் என்றும் தெரிவித்தது.

சீனாவில் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்ட முப்பது ஆண்டுகள் டிச.18ம் தேதி சிறப்பிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.