2008-12-19 18:35:16

ஜிம்பாவே நாட்டின் ராபர்ட் முகாபே கட்டாயமாகப் பதவி இறக்கம். 19,டிசம்பர் .


ஜிம்பாவே நாட்டின் தலைவர் ராபர்ட் முகாபே கட்டாயமாகப் பதவி இறக்கம் செய்யப்படவேண்டும் என்கின்றனர் அந்நாட்டு ஆயர்கள் . இம்மாதம் 18 ஆம் தேதி ஜிம்பாவே நாட்டு ஆயர்குழுவின் சார்பில் செய்தி வெளியிட்ட டர்பன் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் வில்பிரட் நாப்பியர் உடனடியாக முகாபேயை பதவி நீக்கம் செய்யவேண்டும் . அவருக்கும் அவருடைய தொண்டர்களுக்கும் எந்தவித ஆதரவும் கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார் . உலகமனைத்தும் முகாபேயின் போக்கை வெறுப்போடு நோக்கும் இந்த வேளையில் தென் ஆப்பிரிக்கா , போட்ஸ்வானா , ஸ்வைஸ்லாண்ட் ஆகிய நாடுகளின் ஆயர்கள் ஜிம்பாவேயின் வேகமாக சீர்குலையும் மனித வாழ்வின் நிலையைக் கருத்தில் கொண்டு வேறு எதையும் கருத்தில் கொள்ளாது முகாபேயை பதவி நீக்கம் செய்வதையே உடனடி அவசர நடவடிக்கையாச் செய்யவேண்டும் எனக்கூறியுள்ளார் . நாட்டில் 1100 பேர் காலராவால் இறந்துள்ளனர் . 50 இலட்சம் பேர் உணவில்லாது தவிக்கின்றனர் . குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை . நாட்டு மக்கள் வறுமையிலும் துயரத்திலும் இறக்கும்போது வேறு எவரும் முகாபேயைப்போல பதவியை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு இருக்கவில்லை என கர்தினால் நாப்பியர் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.