ஒரிசாவில் நடக்கும் வன்முறைகள் தீவிரவாதம் . 19, டிசம்பர் .
கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரிசாவில் நடக்கும் வன்முறைகள் தீவிரவாதம் என்கின்றனர் இந்திய
ஆயர்கள் .
இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ்சபை தீவிரவாதத்துக்கு எதிராக கொண்டுவந்துள்ள
சட்டம் இந்திய ஆயர்கள் குழுவினருக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை . சமயச் சிறுபான்மையினருக்கும்
, பழங்குடி மக்களுக்கும் எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டியவை என
இந்திய ஆயர்கள் மன்றம் தெரிவித்துள்ளது . தீவிரவாதம் என்ற பதம் பழங்குடியினருக்கும் மதச்
சிறுபான்மையினருக்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகளையும் உள்ளடக்க வேண்டும் என ஆயர்கள்
மன்றம் தெரிவித்துள்ளது . தீவிரவாதச் செயல்களுக்குப் பிறரைத் தூண்டும் தீப்பொறி பறக்கும்
அறைகூவல்களும் , தீவிரவாதம் என்ற வரம்புக்குள் வருவதாக இந்திய ஆயர்கள் மன்றத்தின் செயலர்
பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார் .