2008-12-19 18:29:30

ஐ. நாவின் ஓரினச் சேர்க்கை பற்றிய சட்டங்கள் பற்றிக் திருப்பீடத்தின் கருத்து .

19, டிசம்பர் ,08 .


ஐ. நாடுகள் சபையின் ஓரினச் சேர்க்கைக்கான திட்டங்கள் மனித உரிமைச் சட்டங்களுக்குச் சவாலாக இருப்பதாக திருப்பீடம் தெரிவிக்கிறது . இதை ஐ.நாடுகள் சபையின் 63 ஆவது அமர்வில் வத்திக்கான் அதிகாரி தெரிவித்துள்ளார் . ஓரினச் சேர்க்கைப் பழக்கமுள்ளவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை ஐ.நா சபை கண்டித்துள்ளது . இதனை திருப்பீடம் வரவேற்றுள்ளது . அநீதியானமுறையில் அப்பழக்கம் உள்ளவர்களை வேறுபடுத்திப் பார்ப்பதையும் தவறு எனத் திருப்பீடம் கூறியுள்ளது . ஆனால் பாலினம் பற்றியும் பாலினப்போக்குப் பற்றியும் ஐ.நா தெளிவாக வரையறுக்கவில்லை எனத் திருப்பீடம் தெரிவித்துள்ளது . ஐ.நா சபையின் 192 நாடுகளில் 62 நாடுகளே இந்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன . அமெரிக்க ஐக்கியக் குடியரசும் , முஸ்லிம் நாடுகளும் சம்மதம் தர மறுத்துள்ளன . பல நாடுகளில் ஓரின வாழ்வு சட்டத்துக்குப் புறம்பானதாகவும் , சில நாடுகளில் மரணத்தீர்ப்புக்கு உரிய குற்றமாகவும் கருதப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.