2008-12-18 18:47:04

மனித உரிமைச் சட்டங்கள் பற்றி எச்சரிக்கை விடுக்கிறார் பேராயர் 181208 .


மனதில் எழும் விருப்பங்கள் எல்லாம் மனித உரிமைச் சட்டங்களானால் அவை அநீதிக்கும் சுய விருப்பங்களை நிறைவேற்றும் கொள்கைகளுக்கும் இடமளிக்கும் எனப் பேராயர் சில்வானோ தோமாசி மனித உரிமைச் சட்டங்கள் அமலுக்கு வந்த 60 ஆம் கொண்டாட்டத்தின்போது ஐ. நாடுகள் சபையில் உரை வழங்கியுள்ளார். பேராயர் சில்வானோ தோமாசி ஐ .நாடுகள் சபையில வத்திக்கானுக்கான நிரந்தர உறுப்பினர் .

புதிய உரிமைச் சட்டங்கள் மனித உரிமைச் சட்டங்களுக்கு புதிய அர்த்தங்களைக் கொடுப்பதாகப் பேராயர் கூறியுள்ளார் . வாழ்வதற்கு உள்ள உரிமைகள் , குடும்ப வாழ்வுக்குத் தரவேண்டிய மரியாதை , திருமணம் என்னும் ஆண் பெண் இருவரிடையே நிலவும் ஒன்றிப்பு , சமயச் சுதந்திரம் , மற்றும் மனச் சாட்சிச் சுதந்திரம் , அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு முன்னர் அரசுக்கள் அதிகார வரம்பின் எல்லைகளை மீறாது , அவர்கள் உரிமைகளை கருத்தில் கொள்ளவேண்டும் எனப் பேராயர் வலியுறுத்தினார் . குடிமக்களின் நலன் காக்கவேண்டும் எனவும் ,மனித உரிமைச் சட்டங்களின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து செயல்படுத்தவேண்டும் எனவும் பேராயர் கூறியுள்ளார் . முடிவாக ஒவ்வொரு மனிதனும் முழுமையான வளர்ச்சி பெறவும் , அமைதியாக வாழவும் உரிமையுள்ளது எனப் பேராயர் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.