2008-12-17 15:44:31

மெக்சிகோவில் திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படாமலே இருக்கின்றன


டிச.17,2008. மெக்சிகோவில் திட்டமிட்ட குற்றக்கும்பல்களால் பாதிக்கப்படுவோரில் ஒரு விழுக்காட்டினருக்கு மட்டுமே நீதி கிடைக்கின்றது என்று பொது பாதுகாப்பு குறித்த அறிக்கை கூறுகிறது.

அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் அவை வெளியிட்ட அறிக்கையின்படி நாட்டில் 99 விழுக்காடு குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலே இருக்கிறார்கள் என்றுரைத்தது.

மெக்சிகோவில் போதைப் பொருள் வியாபாரத்தோடு தொடர்புடைய வன்முறைகள் அதிகரித்து வரும் வேளை, இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை ஏறத்தாழ ஆறாயிரம் கொலைகளும் ஆயிரம் கடத்தல்களும் இடம் பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.