2008-12-17 15:44:07

நிதி நெருக்கடியால் ஆட்டம் கண்டுள்ள நாடுகள் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குத் தங்கள் கதவுகளைத் திறக்க ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


டிச.17,2008. நிதி நெருக்கடியின் பாதிப்பைக் குறைப்பதற்கு குடியேற்றதாரரைப், பயன்படுத்தப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டிய அதேவேளை, நிதி நெருக்கடியால் ஆட்டம் கண்டுள்ள நாடுகள் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குத் தங்கள் கதவுகளைத் திறக்குமாறு அழைப்புவிடுத்தார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

டிசம்பர் 18, நாளை சர்வதேச குடியேற்றதாரர் தினத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடைபிடிப்பதை முன்னிட்டு பான் கி மூன் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்றைய நிதி நெருக்கடியால் உலகின் இருபது கோடி குடியேற்றதாரர் நலிந்தவர்களாக மாறியுள்ளனர் என்றுரைக்கும் அச்செய்தி, உலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி 2009 இல் உலக அளவில் ஏறத்தாழ இரண்டு கோடிப்பேர் வேலை இழக்கக்கூடும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, உலகில் குடியேற்றதாரரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இவ்வுலக தினத்தை அனுசரிக்க 2000 மாம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.








All the contents on this site are copyrighted ©.