2008-12-17 17:46:08

திருவருகைக் காலச் சிந்தனை . டிசம்பர் 18 .


நாம் கிறிஸ்துவின் பிறப்புவிழாவுக்கு நல்ல முறையில் தயார் செய்ய இந்த இறுதி எட்டு நாட்களும் தரப்பட்டுள்ளன . 17 தேதியிலிருந்து 24 தேதிவரை சிறப்பான தயாரிப்புக்கான நவநாட்கள்.



இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது . மத் . 1 , 18 24 .

எம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள் என மத்தேயு தெளிவாக விளக்குகிறார் . இதை மத்தேயு அழுத்தமாகக் கூறுவதற்குக் காரணம் அவருடைய நற்செய்தியின் இறுதியில் மீண்டும் அவர் இதே கருத்தைத் தெளிவாக்குகிறார் . மத்தேயு 28, 20 இல் நற்செய்தியின் இறுதி வசனம் இதோ உலக முடிவு வரை நான் எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன் என்று இயேசு கூறியதாகக் கூறுகிறார் . தமது நற்செய்தியை உங்களோடு இருக்கிறேன் என்ற குறிப்பேடு தொடங்கி , முடிக்கும் மத்தேயு அவரது நற்செய்தியின் முக்கியச் செய்தியாக என்ன கூறவிழைகிறார் . தம் மக்கள் நடுவில் தங்குவதாகக் கடவுள் கொடுத்த உறுதி மொழி இயேசுவின் வருகையில் நிறைவுறுவதாகத் தெரிவிக்கிறார் . இயேசுதான் உலகின் ஆண்டவர் . அவர் மனித உடலில் எழுந்தருளிவருகிறார் .நாம் இயேசுவின் பிரசன்னத்தை நம் வாழ்வில் நாம் கண்டுணர்ந் துள்ளோமா . உன்னை உருவாக்கிய ஆண்டவர் கூறுகிறார் – அஞ்சாதே . நான் உன்னோடு இருக்கிறேன் . எசாயா .








All the contents on this site are copyrighted ©.