2008-12-17 15:42:53

கர்தினால் அரின்சேயின் இளம் குருவுக்கான கடிதம்


டிச.17,2008. தனது கன்னிமை வாழ்வை, மகிழ்வோடும் பிரமாணிக்கத்தோடும் நல்ல நேர்மறை உணர்வுகளோடும் வாழும் ஒரு குரு, நல்ல சான்றாகத் திகழ்கிறார், இன்றைய உலகில் அது மறக்கப்பட முடியாதது என்று கர்தினால் பிரான்சிஸ் அரின்சே கூறுகிறார்.

திருவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிக் கடந்த வாரத்தில் ஓய்வுபெற்ற இவர், “குருத்துவம் பற்றிய சிந்தனைகள்-ஓர் இளம் குருவுக்கான கடிதம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குருக்களின் கற்பு வாழ்வு மீது திருச்சபை எப்பொழுதும் மிகுந்த நன்மதிப்பை வைத்துள்ளது என்று எழுதியுள்ள கர்தினால் அரின்சே, கிறிஸ்து கன்னிமை வாழ்வு வாழ்ந்தார், அதனைத் தம் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், சீடத்துவ அழைப்பைப் பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு அதே கன்னிமை வாழ்வைப் பரிந்துரைக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

பாலியல் மற்றும் அதன் புனிதத்தன்மை மீறப்படுவது பற்றி அதிகப்படியாகப் பேசப்படும் இன்றைய உலகில் தனது கன்னிமை வாழ்வில் பிரமாணிக்கமாக இருக்கும் குருக்களை உலகத்தால் மறக்க முடியாது என்று மேலும் கூறியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.