2008-12-16 16:20:15

அடுத்த மூன்று சர்வதேச இளையோர் தினங்களுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன


டிச.16,2008. அடுத்த மூன்று சர்வதேச இளையோர் தினங்களுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தேர்ந்தெடுத்துள்ள தலைப்புகள் இன்று வெளியிடப்பட்டன.

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 21 வரை ஸ்பெயினின் மத்ரித்தில் சிறப்பிக்கப்படவுள்ள 26ம் சர்வதேச இளையோர் தினத்திற்கான ஆன்மீகத் தயாரிப்பாக அடுத்த மூன்று சர்வதேச இளையோர் தினங்களுக்கானத் தலைப்புகளைத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்று திருப்பீடம் கூறியது.

2009ம் ஆண்டின் 24ம் உலக இளையோர் தினத்திற்கென, நாம் நமது நம்பிக்கையை வாழும் கடவுளில் வைத்துள்ளோம் என்பதும், 2010ம் ஆண்டின் 25ம் உலக இளையோர் தினத்திற்கென, 'நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்பதும், 2011ம்ஆண்டின் 26ம் உலக இளையோர் தினத்திற்கென, கிறிஸ்துவில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருக்கும் நீங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் என்பதும் தலைப்புகளாகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன







All the contents on this site are copyrighted ©.