2008-12-16 16:21:30

227 பாலஸ்தீனக் கைதிகளுக்கு விடுதலை


டிச.16,2008 இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்குமிடையேயான இணக்கப் பேச்சுவார்த்தைகளை ஆழப்படுத்துமாறு, மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுவதற்கான வழிகளைத் தேடிவரும் ஐ.நாவும், இவ்விவகாரத்தில் அதனோடு ஒத்துழைக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இரஷ்யா மற்றும் அமெரிக்க ஐக்கிய குடியரசும் விண்ணப்பித்துள்ளன.

அதேசமயம் இஸ்ரேல் தனது அனைத்துக் குடியிருப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுள்ள அக்குழுவினர், இஸ்ரேல் இந்நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் எதிர்மறை விளைவுகளைக் கொண்டுவரும் எனஅறு கூறியுள்ளனர்.

இன்னும், வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனத் தலைமை அமைதிக்காக எடுத்து வரும் முயற்சிகலை அங்கீகரிக்கும் விதமாக இஸ்ரேல் அரசு, 227 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துள்ளது.

இவர்களில் 210 பேர் வெஸ்ட் பேங்கையும் 17 பேர் காஜா ஸ்ட்ரிப்பையும் சேர்ந்தவர்கள்.

இஸ்ரேல் அரசுத் தலைவர் மகுமுத் அப்பாஸின் தலைமையின் கீழ் 2005ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 2100 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் சிறைகளில் இன்னும் 11ஆயிரம் பாலஸ்தீனக் கைதிகள் உள்ளனர்







All the contents on this site are copyrighted ©.