2008-12-15 15:48:57

ஜனவரி முதல் நாளை பயங்கரவாதத்திற்கு எதிரான தினமாகக் கடைபிடிப்பதற்கு கேரளத் தலத்திருச்சபை தீர்மானித்துள்ளது


டிச.15,2008. பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளை ஜனவரி முதல் நாளை பயங்கரவாதத்திற்கு எதிரான தினமாகக் கடைபிடிப்பதற்கு கேரள கத்தோலிக்க ஆயர்கள் அவை தீர்மானித்துள்ளது.

கொச்சி மேய்ப்புப்பணி மையத்தில் கூட்டம் நடத்திய கேரள கத்தோலிக்க ஆயர்கள், இத்தினத்தன்று ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதிமொழிகள் எடுக்கப்படும் என்றும் கூறினர்.

மேலும், ஒரிசாவில் அமைதிக்காகவும் இந்தியாவில் பல்வேறு சமூகங்கள் மத்தியில் நட்புறவு வளர்வதற்காகவும் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவன்று சிறப்பு செபங்கள் செபிக்கப்படும் என்றும் கேரள கத்தோலிக்க ஆயர்கள் அவை தீர்மானித்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்கு மறுவாழ்வு தகுந்த முறையில் தரப்படவும் விண்ணப்பித்த அவர்கள், பெண்களின் மாண்பு உறுதி செய்யப்படவும், பெண்கள் திருச்சபையின் வாழ்வில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும் கொள்கைகள் வகுக்கப்படும் எனவும் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.