2008-12-15 15:48:36

கிறிஸ்துவின் திருவருகையை கலக்கமற்ற மனநிலையில் வரவேற்குமாறு திருத்தந்தை அழைப்பு


டிச.15,2008. கிறிஸ்துவின் திருவருகையை மனசாந்தியுடன்கூடிய நிலையில் வரவேற்குமாறு கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே திருச்சபை விசுவாசிகளை ஊக்கப்படுத்தி வருகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சி ஞாயிறு என்றழைக்கப்படுகிறது, ஆண்டவரில் எப்பொழுதும் அகமகிழுங்கள், மீண்டும் சொல்கிறேன் அகமகிழுங்கள் என்ற புனித பவுலின் வார்த்தைகளையும் குறிப்பிட்டு நாம் ஏன் அகமகிழ வேண்டும் என்பதற்கு புனித பவுல் சொல்லும் காரணங்களையும் விளக்கினார் திருத்தந்தை.

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்த அவர், ஆண்டவர் அண்மையில் இருப்பதால் நாம் அகமகிழ வேண்டும் எனினும் ஆண்டவர் அண்மையில் இருப்பதன் பொருள் என்ன? இதை எப்படி புரிந்து கொள்வது? என்பதையும் திருத்தந்தை விளக்கினார்.

ஆண்டவர் அண்மையில் இருக்கிறார் என்பது காலம் மற்றும் இடத்தைப் பொறுத்தது அல்ல, மாறாக அன்பைப் பற்றியது, அதாவது அன்பு அண்மையில் இருக்கின்றது என்பதாகும் என்றார் திருத்தந்தை.

கிறிஸ்துமஸ், நமது விசுவாசத்தின் இந்த அடிப்படை உண்மையை நமக்கு நினைவுபடுத்துகின்றது என்ற அவர், கிறிஸ்துமஸ் குடிலின் முன், பாலன் இயேசுவில் கடவுளின் முகத்தைத் தியானித்து கிறிஸ்தவ மகிழ்ச்சியை நாம் இருசிக்க முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே ஆண்டவர் அண்மையில் உள்ளார் என்ற பவுலின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார் அவர்.

 








All the contents on this site are copyrighted ©.