2008-12-14 18:45:11

திருவருகைக் கால சிந்தனை – மத்தேயு நற்செய்தி .அதிகாரம் 21 , திருவசனங்கள் 23 – 27 .


இயேசு தலைமைக்குருக்களிடம் யோவானுக்கு திருமுழுக்குக் கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது எனக் கேட்டார் . அவர்கள் இயேசுவிடம் எங்களுக்குத் தெரியாது எனப் பதிலுரைத்தார்கள் . மக்களுக்கு உண்மையான இறைவாக்கினர் யார் என்றும் , போலி இறைவாக்கினர் யார் என்றும் அடையாளம் காட்டவேண்டிய தலைமைக்குருக்கள் தெரியாது எனக் கூறுவதால் அவர்கள் பணியைத் திறம்படச் செய்யத் தவறுகிறார்கள் . உண்மையைக் கூறுவதற்குப்பதிலாக தெரியாது என மறுதலிப்பது மிகப் பெரிய குற்றம் . உண்மையை உரைக்க வேண்டிய கட்டத்தில் எந்தப் பதில் நமக்குச் சாதகமாக இருக்கும் எனப் பார்ப்பது தவறு . சரியானது எது என்பதைக் கூற முன்வரவேண்டும் .



சிந்தனைக்கு – ஒன்றன் மெய்ப்பொருள் உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளும்போது நாம் நீதியுள்ளவர்களாக , வீரமுள்ளவர்களாக , பண்பாளராக , தெய்வமாக மாறுகிறோம் என்கிறார் வில்லியம் லாய்ட் காரிசன் என்பவர் .








All the contents on this site are copyrighted ©.