2008-12-13 15:58:57

பணக்கார நாடுகளில் 3முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் தங்கள் பெற்றோரிடம் இருப்பதில்லை


டிச.13, 2008. பணக்கார நாடுகளில் 3முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் தங்கள் பெற்றோரிடம் இருப்பதில்லை, இதனால் அவர்களின் இளமைப்பருவ வளர்ச்சியின் தன்மை பாதிக்கப்படுகின்றது என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பின் புதிய அறிக்கை கூறுகிறது.

குழந்தைப் பருவ உயர்தரக் கல்வியும் கவனிப்பும் அக்குழந்தைகளின் அறிவாற்றல், மொழித்திறன், உணர்வுகள் மற்றும் சமூக வளர்ச்சியை உயர்த்துகின்றன என்றும் உரைத்தார் அவ்வமைப்பின் இயக்குனர் மார்த்தா சாந்த்தோஸ் பய்ஸ்.

எனினும் இவை குழந்தையின் ஒருங்கமைந்த வளர்ச்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள மார்த்தா, குழந்தைப் பருவ வளர்ச்சியின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படுமாறு வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.