2008-12-13 15:58:32

திருச்சபை நவீன தொழிற்நுட்பங்களின் கவர்ச்சிகளில் மூழ்கி தன்னை இழந்துவிடாது- வத்திக்கான் அதிகாரி


டிச.13, 2008. திருச்சபை நவீன தொழிற்நுட்பங்களின் கவர்ச்சிகளில் மூழ்கித் தன்னை இழந்துவிடாது, அதேசமயம் அமைதி அன்பு, இறைவனைச் சந்தித்தல் ஆகியவற்றை வளர்ப்பதற்கு அவற்றைப் பயன்படுத்தப் பயப்படாது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

நேற்று சிறப்பிக்கப்பட்ட குவாதாலுப்பே மாதா திருவிழாவையொட்டி திருச்சபையின் சமூகத் தொடர்பாளர்களுக்கென வெளியிட்ட செய்தியில் திருப்பீட சமூகத் தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் க்ளவ்தியோ செல்லி இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்வாண்டின் முக்கிய நிகழ்வாகிய இறைவார்த்தை பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில் திருச்சபை இதனை நன்கு அனுபவித்தது என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்துவில் அன்பாக கடவுள் தம்மையே முழுமையாக நமக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை ஆயர்கள் மாமன்றம் நமக்குத் தெளிவாக நினைவுபடுத்தியது என்றுரைத்த பேராயர் செல்லி, ஒவ்வொரு நற்செய்தி அறிவிப்புப்பணியும் சமூகத் தொடர்புதான் என்றார்.

தமது கால வெகுஜனத் தொடர்பைப் பயன்படுத்திய மாபெரும் தொடர்பாளராகிய தர்சு நகர் புனித பவுலைப் பின்பற்றி இப்புதிய கலாச்சாரத்தில் தகுதியான தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி அதேசமயம் அதற்கு அடிமையாகி விடாமல் நற்செய்தி அறிவிக்கக் கேட்டுக் கொண்டார் பேராயர் செல்லி.







All the contents on this site are copyrighted ©.