2008-12-13 15:57:55

இன்று உலகு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் - திருத்தந்தை


டிச.13, 2008 இன்று உலகு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீதி, ஒருமைப்பாடு, அமைதி ஆகியவை குறித்த ஒருமித்த கருத்துக்களைக் கொண்டவர்கள் மத்தியில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இன்று முற்பகலில் உரோமையிலுள்ள திருப்பீடத்துக்கான இத்தாலிய தூதரகத்துக்குச் சென்று ஏறத்தாழ ஒருமணி நேரம் அங்கு செலவிட்டு அங்கு பணியாற்றுவோருக்கு உரையாற்றிய திருத்தந்தை, திருப்பீடத்துக்கும் இத்தாலிய குடியரசுக்கும் இடையேயான நல்லுறவுகளுக்கு இத்தூதரகம் ஆற்றும் பணிகளைப் பாராட்டினார்.

இலாத்தரன் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதன் எண்பதாம் ஆண்டும் அது திருத்தப்பட்டதன் 25ம் ஆண்டும் வருகிற ஆண்டு பிப்ரவரியில் இடம்பெறவுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த பொரோமெயோ மாளிகைக்குத் திருத்தந்தையர்கள் 12ம் பத்திநாதர், ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பவுல் வருகை தந்ததையும் நினைவுகூர்ந்தார்.

கிறிஸ்துமஸ் அண்மித்து வரும் இவ்வேளையில், இப்பூமியிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் தமது அமைதியின் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இன்னும் அச்சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ப்ராத்தினி, இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்







All the contents on this site are copyrighted ©.