2008-12-12 16:34:16

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தை வாசித்து தியானிக்குமாறு உரோம் பல்கலைக்கழக மாணவரிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை


12டிச.,2008. புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தை வாசித்து தியானிக்குமாறு உரோம் பல்கலைக்கழக மாணவரிடம் கேட்டுக் கொண்ட அதேவேளை, விவிலிய குறுந்தகடு ஒன்றையும் பன்னிரண்டு மாணவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக நேற்று மாலை வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலியில் பங்கு கொண்ட உரோம் பல்கலைக்கழக மாணவரை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம், அவர்களின் சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகளின் போக்குகளை மாற்றட்டும் என்றார்.

புனித பவுலின் இத்திருமுகம் ஏறத்தாழ 1950 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் வாழும் திருச்சபைக்கு முக்கியமான கோட்பாடாக இன்றும் இருக்கின்றது என்றார் அவர்.

இன்றைய உரோம் கிறிஸ்தவ மாணவரிடமும் பேராசிரியர்களிடமும் புனித பவுல் பேசட்டும் என்ற திருத்தந்தை, அவரின் அனுபவம் உங்களுக்கும் இருக்கட்டும் என்றும் கூறினார்.

மீட்பானது ஒரு கொடை, அது யார் மீதும் திணிக்கப்படுவதில்லை என்றும் உரோம் பல்கலைக்கழக மாணவரிடம் கூறிய அவர், இக்கொடையை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஏற்குமாறு கூறினார்.








All the contents on this site are copyrighted ©.