2008-12-12 16:35:17

ஏழை கிறிஸ்தவர்கள் அவர்களுக்கென மாநிலம் வழங்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை - மேற்கு வங்காள அமைச்சர்


12டிச.,2008. ஏழை கிறிஸ்தவர்கள் அவர்களுக்கென மாநிலம் வழங்கும் நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்று மேற்கு வங்காள அமைச்சர் ஒருவர் கூறினார்.

கொல்கத்தா பேராயர் இல்லத்தில் வங்காள கத்தோலிக்க கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்காள சிறுபான்மை துறை அமைச்சர் அப்துஸ் சட்டார், அனைத்துக் கிறிஸ்தவர்களும் அவர்களுக்குள்ள சலுகைகளையும் வசதிகளையும் பயன்படுத்துமாறு அழைப்புவிடுத்தார்.

அரசு சாரா அமைப்புகளுக்கு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றிக் குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கென ஒருசமயத்தில் 5 இலட்சம் ரூபாய் வரை அரசிடம் உதவி கேட்கலாம் என்றார்.

சிறுபான்மை துறைக்கு ஏறத்தாழ நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட சட்டார், அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு மாநிலத்தின் சிறுபான்மையினருக்கு உதவ முடியும் என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவத் தலைவர்களிடம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.