2008-12-11 17:27:54

மனித உரிமைகள் அடித்தளம் இல்லாதபோழ்து வீழ்ந்துவிடும் என்கிறார் திருத்தந்தை. 11,நவம்பர்.


நன்னெறிகளைப் புறக்கணிக்கும் போது மனித உரிமைச் சட்டங்கள் பாதுகாப்பும் , உரிய மதிப்பும் இழக்கின்றன . இது அடித்தளமில்லாததால் அழிந்துபோகும் என்கின்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதிக்கான மன்றம் இம்மாதம் 10 ஆம் தேதி ஐ. நா சபையின் மனித உரிமைகள் சட்டங்களின் 60 ஆம் ஆண்டுக்காக வத்திக்கானில் சிறப்பான விழா எடுத்தது . ஐ. நா சபையின் மனித உரிமைச் சட்டங்கள் கலாச்சாரங்களுக்கிடையே நல்ல கலந்துரையாடலுக்கும் மனித மாண்பை விடுதலை உணர்வோடு காப்பதற்கும் அருமையான முயற்சி என்றார் . எல்லா அடிப்படை மனித உரிமைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட்டு ஆதரவு தரப்படும்போதுதான் பாதுகாப்புப் பெறுகின்றன எனத் திருத்தந்தை மேலும் கூறினார் . நம் மனிதத்துவத்தில் இயற்கையாகவே எழுதப்பட்டவை இவை . எல்லா மனிதர் மனத்திலும் மனச் சான்றில் பதிக்கப்பட்டவை என்றார் திருத்தந்தை . மனித உரிமைச் சட்டங்களை அறிவித்த 60 ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது நாம் அவை செயல்படுத்தப்படுகின்றனவா என ஆராயவேண்டும் எனக் கூறிய திருத்தந்தை நாம் அவற்றை அமலாக்க ஊக்குவிக்க வேண்டும் என்றார் .








All the contents on this site are copyrighted ©.