2008-12-11 18:02:10

புதிய மாஸ்கோ பிதாப்பிதா ஜனவரியில் தேர்வு. 11, நவம்பர் .


ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா 2 ஆம் அலெக்சேயின் மறைவால் மாஸ்கோ ஆறாத்துயரத்தில் மூழ்கியது. இந்த மாதம் 9 ஆம் தேதி அவரை நல்லடக்கம் செய்தது. ஆர்த்தோடாக்ஸ் தலைவர்கள் கூடி பிதாப்பிதா 2 ஆம் அலெக்சேக்குப்பின் இடைக்கால ஆர்த்தோடாக்ஸ் தலைவராக மெட்ராபாலிட்டன் கிரில்லை இம்மாதம் 6 ஆம் தேதி தேர்வு செய்தனர் . மறைந்த 2 ஆம் அலெக்சே ரஷ்யாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே முக்கியமானவர் என மெட்ராபாலிட்டன் கிரில் அவரை வருணித்துள்ளார் . புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஜனவரி மாதம் 28 , 29 தேதிகளில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பெப்ரவரி முதல் தேதி புதிய ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் தலைவர் அறிவிக்கப்படுவார்.








All the contents on this site are copyrighted ©.