2008-12-11 19:54:21

காலரா நோயும் பசிப்பிணியும் ஜிம்பாப்வே நாட்டை வாட்டுகின்றன. 11,நவம்பர்.


உலக நல வாழ்வு அமைப்பு இம்மாதம் 10 ஆம் தேதிவரை ஜிம்பாப்வேயில் 775 பேர் காலரா வியாதி காரணமாகக் காலமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. காரித்தாஸ் தொண்டு நிறுவனம் பசிக் கொடுமை காரணமாக மக்கள் வயிற்றை நிரப்புவதற்காக மாட்டுச் சாணத்தை உணவோடு கலந்து உண்பதாகத் தெரிவித்துள்ளது. மனிதரை விலங்குகளாக்கும் வறுமையின் கோரப்பிடியை அங்குக் காண்பதாகக் காரித்தாஸ் நிறுவனத்தின் செயல்திட்டத் தலைவர் லெஸ்லி ஆன் தெரிவித்துள்ளார் . இந்நிலையிலும் அந்நாட்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை . அறுவடை மிக மோசமாக உள்ளதால் நிலைமை இன்னும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது. 50 இலட்சம் பேர் பட்டினியால் அவதியுறுகிறார்கள் . 16 ஆயிரம் பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . இந்தத் தீய விளைவுகளுக்குப் பின்னும் ஜிம்பாப்வே நாட்டு அரசு தொடர்வது சரியல்ல எனக் காரித்தாஸ் கூறுகிறது . உலக நாடுகள் இந்நிலை மாற அறைகூவல் விடுக்க வேண்டும் எனவும் காரித்தாஸ் கூறியுள்ளது . காரித்தாஸ் தொண்டு நிறுவனம் ஜிம்பாப்வேயின் அத்யாவசியமான இந்நேரத்தில் தொடர்ந்து உதவிவருகிறது .








All the contents on this site are copyrighted ©.