2008-12-11 17:29:48

உலக அமைதி தினத்துக்குத் திருத்தந்தையின் செய்தி. 11,நவம்பர் .


வரும் ஜனவரி முதல் நாள் கொண்டாடப்படும் உலக அமைதி தினத்துக்காக திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில் அமைதியை நிலை நாட்ட வறுமையை ஒழிப்போம் என அறைகூவல் விடுத்துள்ளார் . உலகின் எல்லா மக்களுக்கும் உலக அமைதி நாளுக்கான நல்வாழ்த்துக்களைத் திருத்தந்தை தெரிவித்துள்ளார் . மோதல்களுக்கு ஒரு காரணம் ஏழ்மை எனத் திருத்தந்தை கூறியுள்ளார் . அதன் விளைவாக ஏழ்மை அதிகரிக்கிறது என்கிறார் அவர் . வளர்ந்த நாடுகளிலும் கூட பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக உள்ளது. மனித மாண்புக்கு எதிரான வறுமைப் பிணியை நம் மனச்சாட்சிகள் கண்டுகொள்ளாது இருக்க முடியாது எனத் திருத்தந்தை உலக அமைதிக்கான செய்தியில் கூறியுள்ளார் . இந்தச் சூழ்நிலையில் நாம் உலகமயமாக்குதலால் வரக்கூடிய பாதிப்பைக் கண்டுணரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் . மேலும், ஏழ்மை மனித வாழ்க்கை முறைகளையே மாற்றுவதாகத் தெரிவித்துள்ளார் . குழந்தைகள் வேண்டாம் எனப்புறக்கணிப்பது வறுமை காரணமாகவே எனத் திருத்தந்தை கூறியுள்ளார் . வறுமை காரணமாக தொற்று வியாதிகள் பரவுவதோடு எய்ட்ஸ் போன்ற வியாதிகளோடு போராட முடியாமலும் இருக்கிறது என்கின்றார் திருத்தந்தை. குழந்தைகளின் எதிர்காலத்தையே ஏழ்மை அழித்துவிடுகிறது . மற்றும் போர்க்கருவிகளுக்குத் தேவையில்லாது பணத்தை விரயமாக்குவது , உணவுப்பற்றாக்குறை , அடிப்படை வசதிகள் இல்லாமை பற்றிக் கூறிய திருத்தந்தை மனித குலம் முழுவதும் ஒரே குடும்பமாக சுபிட்சமாக வாழ நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஒத்துழைப்பும் இல்லாமையை இல்லாததாக்க உண்டு எனவும் திருத்தந்தை அறைகூவல் விடுத்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.