2008-12-09 17:28:28

தட்ப வெப்ப மாற்றத்தை ஐ.நா சபை கவனத்தில் கொள்ளுமாறு 170 கத்தோலிக்க நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன . 09, நவம்பர்.


வெப்பநிலை மாற்றம் காரணமாக காலநிலையில் மாற்றங்களை , உருவாக்கி வளரும் நாடுகளில் வெள்ளப்பெருக்கும் , வறட்சியும் , இயற்கைச் சீற்றத்தால் உருவாகும் பாதிப்புக்களும் அதிகரித்து வருவதாகவும் அதைத் தடுக்க உடனடியாகத் திட்டமிடவும் கோரி , 92 ஆயர்களும் ,பேராயர்களும் கையொப்பம் இட்டு அப்பரிந்துரையை ஐ.நா சபைக்கு அனுப்பியுள்ளனர். போலந்து நாட்டின் போஸ்னான் நகரில் தட்பவெப்பம் பற்றிய கருத்தரங்கு இம்மாதம் 7 ஆம் தேதி திருப்பலியோடு தொடங்கப்பட்டது.

38 நாடுகளிலிருந்து வந்து உறுப்பினர் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர் . பொறுப்புணர்வு காரணமாகவும் , நடுநிலை காரணமாகவும் இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்குபவர்கள் அதனைத் தடுக்க ஆவன செய்யவேண்டும் எனவும் , செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர் .

தட்பவெப்ப மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்குத் துணை நிற்குமாறு கத்தோலிக்க நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன . இது சமூக நீதியைப் பாதுகாப்பதாகும் எனவும் கூறியுள்ளனர் . ஐ.நா சபையின் தட்பவெப்ப மாற்றம் பற்றிய அரசுக்களின் பிரதிநிகள் கருத்தரங்கு போஸ்னானில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து 12 வரை நடந்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.