2008-12-06 16:19:12

மும்பை பயங்கரவாதத் தாக்குதலையடுத்து கிறிஸ்துமஸ் பெருவிழா ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு இந்திய ஆயர் பேரவை அழைப்பு


06 டிச.,2008. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் இடம் பெற்றுள்ளதையடுத்து வருகிற கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஆடம்பரமாகக் கொண்டாடுவதைத் தவிர்க்குமாறு இந்திய ஆயர் பேரவை நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

ஒரிசா கிறிஸ்தவர்களுக்குத் தோழமையுணர்வைக் காட்டவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து வேதனைகளை அனுபவித்து வரும் நாட்டை நினைத்து, பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுடன் ஆன்மீகத் தோழமையைக் காட்டவும் வேண்டுமென்று இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பெர்னான்டஸ் இந்திய விசுவாசிகளைக் கேட்டுள்ளார்.மேலும் புதுடெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகளைச் சித்தரிக்கும் பின்னணியைக் கொண்ட பொருளில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளார்.

அவ்வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பேராயர் கொன்செஸ்சாவோ, இந்தியாவின் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகள் குறித்து கிறிஸ்தவ சமுதாயம் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறினார்







All the contents on this site are copyrighted ©.