2008-12-06 20:39:13

நம் சிந்தனைக்கு –புனித அம்புரோஸ் .விழா நாள் டிசம்பர் 7.


வாழ்ந்த காலம் கி.பி. 340- 397 . திருவருகைக்கால 2 ஆம் ஞாயிற்று விழா காரணமாக நாம் இன்று இவ்விழாவைக் கொண்டாடவில்லை .

கி.பி. 374 புனித அம்புரோஸ் மிலான் ஆயரானார் .மிகப் பெரிய இறையியல் வல்லுநர் . திருச்சபையின் நான்கு முக்கிய முனைவர்களில் இவரும் ஒருவர் .

கி் . பி . 340 இல் இவர் பிறந்தபோது இவரின் தந்தை பிரான்சில் ஆளுநராகப் பணியாற்றினார் . தந்தை அம்புரோஸுக்கு சிறுவயது நடக்கும்போதே காலமானார். தாயுடன் உரோமைக்கு வந்தார் . தாயும் , சகோதரி புனித மார்சலினாவும் , இவரை மிகக் கவனமுடன் ஞான வாழ்வில் வளர்த்தனர் .சிறுவனாயிருக்கும்போதே கிரேக்க மொழியில் நல்ல நாவன்மை கொண்டிருந்தார் . கவிஞாராகவும் , பேச்சாளராகவும் இருந்திருக்கிறார் . மிலான் நகர ஆயர் இறந்தபோது அம்புரோஸை ஆயராக நியமித்தார்கள் . மக்களின் நலனுக்காகவே இவர் ஆயராக இருந்ததை மக்கள் மகிழ்வோடு உணர்ந்தனர் . மறையுரையில் இறைவனுக்காக கன்னிமை நோன்பைத் தேர்ந்து கொள்வது பற்றி அடிக்கடி பேசுவாராம் . ஏராளமானவர்கள் இம்மறையுரையைக் கேட்டுத் துறவு நிலையைத் தேர்ந்துள்ளார்கள் . ஆரியப்பதித மதத்தை எதிர்த்து முறியடித்தார் . இறக்கும் நேரத்தை முன்னரே உணர்ந்த அம்புரோஸ் கைகளை விரித்துப் பல மணி நேரம் செபித்திருக்கிறார் . கி.பி. 397 இல் இவர் காலமானார் .








All the contents on this site are copyrighted ©.