2008-12-06 16:26:35

டிசம்பர் 08 - தூய கன்னிமரியின் அமல உற்பவம்.


அமல உற்பவ விழா என்பது அன்னைமரியாள் கடவுளின் தனிப்பட்ட சிறப்பு அருளால் மனித வீழ்ச்சியின் தாக்கமின்றி புனித அன்னாளின் வயிற்றில் கருத்தரிக்கப்பட்டதைக் குறிக்கும் பெருவிழாவாகும். இத்தகைய சிறப்புப் பேற்றிற்குக் காரணம் உலகத்தின் தூய மீட்பர் இயேசுவைக் கருவில் தாங்கும் பாத்திரம் தூயதாக இருக்க வேண்டும் என்பதால் தந்தை இறைவன் தன் சிறப்பு அருளால் அன்னைமரியைப் புனிதமாக உருப்பெறச் செய்தார். கபிரியேல் வானதூதர் மரியாளுக்கு வாழ்த்துக் கூறிய போது அருள் நிறைந்த மரியே வாழ்க என்றார். இதுவே மரியா பாவமின்றிப் பிறந்ததற்குச் சான்று. இறைவன் வரைந்த ஓவியங்களில் மிக அழகு வாய்ந்தது மரியாளே என்று புனித அன்சலம் சொன்னார். நாம் இயேசுவை உள்ளத்தில் தறிக்க மரியாவைப் போன்று பாவமின்றி வாழ வேண்டும்.

சிந்தனைக்கு – வெளியிலிருந்து வரும் தடைகளைவிட உள்மனத் தடைகளே சக்திமிக்கவை







All the contents on this site are copyrighted ©.