2008-12-06 16:23:01

ஜிம்பாபுவேயில் காலரா நோயாளிகளுக்கு கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள் உதவி


06டிச.,2008. ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயில் காலரா நோய்ப் பெருமளவாகப் பரவியுள்ள வேளை, கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள் அந்நோயாளிகளுக்கு உதவி வருகின்றன.

பன்னிரண்டாயிரத்துக்கு அதிகமானோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ள வேளை, 565 பேர் ஏற்கனவே இறந்துள்ளனர் டபுள்யு ஹைச் ஒ என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது.

கழிவுநீர் அமைப்பு முழுவதும் சேதமடைந்துள்ள நிலையில் அதனைச் செப்பனிட. பஞ்ச மீட்புத் திட்டங்களுக்குப் பெயர் போன கிறிஸ்தவ எய்ட் பார்ட்டனர் என்ற நிறுவனம் உதவி வருகின்றது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஹசி கூறினார்.

ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனத்தோடு சேர்ந்து மாத்திரைகளைச் சுத்தம் செய்து விநியோகிக்கும் பணிகளையும் கிறிஸ்தவ எய்ட் பார்ட்டனர் செய்து வருகின்றது என்று ஹசி தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.