2008-12-06 16:24:52

சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் தினம்


06டிச.,2008 ஐ.நா.வின் நடவடிக்கைகள் உட்பட உலகின் பல திட்டங்களில் தன்னார்வப் பணி செய்யும் ஆயிரக்கணக்கான மக்களை சமூகங்கள் உற்சாகப்படுத்துமாறு ஐ.நா.அதிகாரிகள் கேட்டுள்ளனர்.டிசம்பர் ஐந்தாம் தேதி சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், நிதிச் சந்தைகள், வெப்பநிலை மாற்றம், அதிகரித்து வரும் உணவு எரிசக்தி விலை போன்று உலகு எதிர் கொள்ளும் சில பெரிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அநேகர் அழைக்கப்படுகிறார்கள் என்றார்.தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கென ஆண்டு தோறும் 140 நாடுகளில் ஏறத்தாழ 7500 தன்னார்வப் பணியாளர்களை ஐ.நா. பணியில் இறக்குகிறது.ஆப்ரிக்காவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ஆசியாவில் மனித உரிமைகள் பாதுகாப்பு,இலத்தீன் அமெரிக்காவில் இளையோர் கல்வி இப்படி பலவற்றுக்கு பன்வலை அமைப்பு மூலம் தன்னார்வப் பணியாளர்கள் உதவி செய்வதையும் ஐ.நா.குறிப்பிட்டது







All the contents on this site are copyrighted ©.