2008-12-05 18:36:12

திருத்தந்தையைச் சந்திக்கிறார் அர்ஜென்டீனாவின் அரசுத்தூதர். 051208


வத்திக்கான் நாட்டுக்கான அர்ஜென்டீனாவின் அரசுத் தூதர் திரு. ஜூவான் பவுலோ கபியெரோ இவ்வாரம் வெள்ளி காலையில் திருத்தந்தையை அவரது வத்திக்கான் மாளிகையில் சந்தித்து, தமக்குரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார் .அவரை வரவேற்ற திருத்தந்தை அர்ஜென்டீனாவின் அரசுத்தூதர் கபியெரோவின் பணி மிகப் பொறுப்புள்ளது எனக் கூறினார் . வத்திக்கானுக்கும் அர்ஜென்டீனாவுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வளரும் எனத் திருத்தந்தை மகிழ்ச்சியோடு கூறினார் .

சந்திப்புக்குத் தொடக்கத்தில் அர்ஜென்டீனா குடியரசுத்தலைவர் டாக்டர் கிறிஸ்டீனா பெர்ணான்டஸ் தே கிறிஸ்னர் தெரிவித்திருந்த வாழ்த்துச் செய்தியை அரசுத்தூதர் கபியேரோ தெரிவித்து, திருத்தந்தைக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் . அதற்கு நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை அர்ஜெண்டீனாவில் ஒற்றுமை , நீதி , மற்றும் மனித வள மேம்பாட்டுக்காக எடுக்கும் நல்ல முயற்சிகளைப் பாராட்டினார் .



அர்ஜெண்டீனா கிறிஸ்துவத்தில் ஆழமாக வேர் ஊன்றிய நாடு என்றும் , நற்செய்தியின் தாக்கம் அதிகமாக உள்ள நாடு என்றும் , கிறிஸ்தவ வாழ்வு நெறியினை வாழ்ந்து காட்டுபவர்கள் என்றும் திருத்தந்தை பாராட்டுத் தெரிவித்தார் . அதன் பயனாக அந்நாட்டின் செபரீனோ நுமுன்கூரா என்பவர் கடந்த ஆண்டு முத்திபெற்றவராக அறிவிக்கப்பட்டார் எனத் திருத்தந்தை மேலும் கூறினார் .

சந்திப்பின் முடிவில் அர்ஜெண்டீனாவின் அரசுத்தூதர் கபியெரோவுக்கும் நாட்டுத் தலைவருக்கும் மக்களுக்கும் திருத்தந்தை தமது ஆசியை வழங்கி்னார் .








All the contents on this site are copyrighted ©.