2008-12-05 18:47:58

இந்திய ஆயர்கள் தீண்டாமையை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளார்கள் .05 ,நவம்பர் ,08.


இந்தியாவில் சாதிகள் இல்லை எனக்கூறி பல்லாண்டுகள் ஆகின்றன . ஆனால் தீண்டாமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளோர் இன்னும் ஒதுக்கப்பட்டும் , தாக்கப்பட்டும் வருகிறார்கள் . முக்கியமாக அவர்கள் கிறிஸ்தவகர்களாக மதம் மாறியிருந்தாலோ , இஸ்லாமியராக மாறியிருந்தாலோ அதிகத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் .

வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி ஞாயிறன்று தாழ்த்தப்பட்ட சாதியினர் தினமாகச் சிறப்பிக்க இந்திய ஆயர் குழு முடிவு செய்துள்ளது . நீதி , விடுதலை என்ற தலைப்புக்களில் சிந்திக்க உள்ளனர் . ஒரிசாவில் கொல்லப்பட்டவர்களில் 57 பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் , அங்கு தாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்திய ஆயர் குழு தெரிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.