2008-12-03 18:00:58

வரலாற்றில் இந்நாள் – டிசம்பர் 4 .


1154 - இங்கிலாந்தில் பிறந்த நிக்கோலாஸ் என்பவர் 54 வயதில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார் . நான்காவது ஆட்ரியன் என்ற பெயர் சூட்டிக் கொண்டார் . ஆங்கில மண்ணிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே திருத்தந்தையாகியுள்ளார் .



1443 திருத்தந்தை 2 ஆவது ஜூலியஸ் பிறந்த நாள் . இவர் மிகச் சிறந்த கலைஞர்கள் மைக்கிள் ஆஞ்சலோ , பிரமாண்டே , இரபேயல் ஆகியோருக்கு ஆதரவாக இருந்தவர் . இப்பொழுது உள்ள தூய பேதுரு பசிலிக்காவுக்குத் திட்டமிட்டவர் இவரே .



1563 மாபெரும் திரிதெந்தின் திருச்சங்கத்தின் இறுதிக் கட்டம் 18 ஆண்டுகளுக்குப்பின் தொடர்ந்தது .



1674 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைத் தந்தை ஜாக்ஸ் மார்க்கெட் அமெரிக்காவின் சிக்காக்கோ நகருக்கு வித்திட்டார் .



1809 அகில உலக விவிலியக் கழகம் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டது . உலகின் 150 நாடுகளுக்கு விவிலியத்தைக் கொடுத்திருக்கிறது .








All the contents on this site are copyrighted ©.