2008-12-02 14:54:14

மதங்கள் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை, மாறாக அவற்றைப் பின்பற்றுவோர் பற்றியே பயப்பட வேண்டியிருக்கின்றது - கர்தினால் தவ்ரான்


டிச.02,2008. மதங்கள் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை, மாறாக அவற்றைப் பின்பற்றுவோர் பற்றியே பயப்பட வேண்டியிருக்கின்றது என்று கர்தினால் ஜான் லூயி தவ்ரான் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உரோமையில் இடம் பெறும் கூட்டம் ஒன்றில் பல்சமய உரையாடல் – ஆபத்தானதா அல்லது பயனுள்ளதா என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் தவ்ரான், இவ்வாறு கூறினார்.

மதத்தைப் பின்பற்றவோரே தங்களது தீய செயல்களால் மதத்தை இழிவு படுத்துகின்றனர் என்ற அவர், வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார்.

கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் சமுதாயத்தின் பொது நலனுக்காகத் மிகுந்த சேவைகளைச் செய்ய முடியும் என்றுரைத்த கர்தினால் தவ்ரான், இதற்குத் தனிப்பட்ட செபம், குழுவாகச் சேர்ந்து செய்யும் செபங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மதங்கள், தங்கள் மதத்தவர்கள் மற்ற மதத்தவரின் மனித மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் மதிக்கவும், சகோதரத்துவ பிறரன்பு உணர்வில் வளரவும் கற்றுக் கொடுக்க வேண்டும் அவர் பரிந்துரைத்தார்.

இந்தியா, ஈராக் நைஜீரியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே வன்முறைக்கு ஆளாவதையும் கர்தினால் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.