2008-12-02 19:43:57

தவறான பாலினப் போக்குகளை ஐ.நா ஆதரிப்பதை வத்திக்கான் எதிர்க்கிறது .0211.


இயற்கைக்கு மாறுபட்ட பாலினப் போக்குக் கொண்டவர்களை வேறுபடுத்தி நோக்குவதற்கு எதிராக ஐ.நா சபை தீர்மானம் கொண்டுவர உள்ளது . இதனை திருப்பீடத்தின் ஐ.நா சபைக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே குறைகூறியுள்ளார் . ஐ.நா சபையின் 27 நாடுகள் ஐ.நாவின் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது . இத்தீர்மானம் இம்மாத இறுதியில் ஐ.நா சபையில் கொண்டுவரப்பட உள்ளது . இதன் ஆதரவாளர்கள் இயற்கைக்கு மாறுபட்டமுறையில் பாலினப் பழக்கம் கொண்டவர்களை அங்கீகரிப்பதில் இது ஒரு படி முன்னேற்றம் என எண்ணுகின்றனர் . அமலாக உள்ள இத்திட்டம் காரணமாக 67 விழுக்காடு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைக் கொண்ட புருண்டி நாடு தவறான பாலினச் சேர்க்கை கொண்டோரைக் குற்றவாளிகள் என பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.