2008-12-02 14:53:38

கோப்பர்னிக்குஸின் எஞ்சிய பாகங்களை வெற்றிகரமாகக் கண்டுபிடித்திருப்பது அறிவியலுக்கும் மதத்திற்குமிடையேயான பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கு உதவுவதாக இருக்கின்றது - ஆயர்


டிச.02,2008. கத்தோலிக்கக் குருவும் நவீன வானியல் தந்தையுமான நிக்கோலாஸ் கோப்பர்னிக்குஸின் உடலில் எஞ்சிய பாகங்களை வெற்றிகரமாகக் கண்டுபிடித்திருப்பது அறிவியலுக்கும் மதத்திற்குமிடையேயான பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கு உதவுவதாக இருக்கின்றது என்று ஆயர் ஜாசெக் ஜெஜியெர்சிக் கூறினார்.

புரிந்து கொள்ளாத தன்மையினால் திருமறைநூலுக்கு விளக்கம் அளிப்பதற்கும் உலகு பற்றிய அனுபவ கணிப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் மெதுவாகக் குறைந்து வருவதாகக் கூறிய வார்மியா துணை ஆயர் ஜெஜியெர்சிக், இம்மோதல்களில் கோப்பர்னிக்குஸ் முக்கிய கருவாக இருந்ததால் அவரைத் திருச்சபை கௌரவிக்க விரும்புகிறது என்றார்.

கோப்பர்னிக்குஸின் எலும்புகளைக் கண்டுபிடித்து அவரது உடலை அமைப்பதற்கு கடந்த 200 வருடங்களில் முந்தைய தலைமுறைகள் வெர்றி காணவில்லை என்றும், இந்த எலும்புகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மேற்பார்வையிட்ட ஆயர் ஜெஜியெர்சிக் தெரிவித்தார்.

2005ம் ஆண்டில் புரோம்போர்க்கிலுள்ள 14ம் நூற்றாண்டு பேராலயத்தில் கோப்பர்னிக்குஸின் உடலில் எஞ்சிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போலந்து மற்றும் சுவீடனில் நடைபெற்ற டி என் எ பரிசோதனைக்குப் பின்னர் தற்சமயம் அது கோப்பர்னிக்குஸின் உடலில் எஞ்சிய பாகங்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற கருத்தை வெளியிட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்குஸ் பற்றி போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆயர் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.