2008-12-02 14:53:51

ஏழை நாடுகளுக்கான உதவி சிக்கலான ஒன்று என்பது நேர்மையிலிருந்து தவறுவதாக இருக்கிறது - திருப்பீடம்


டிச.02,2008. ஏழை நாடுகளுக்கு உதவி செய்வது, பெரும் பளுவான, சிக்கலான ஒன்று என்று வளர்ந்த நாடுகள் சாக்குப்போக்கு சொல்லி வருவது, நேர்மையிலிருந்து தவறுவதாக இருக்கிறது என்று திருப்பீட அதிகாரி ஒருவர் குறை கூறினார்.

கத்தார் நாட்டு தோஹாவில் இன்று நிறைவு பெற்ற வளர்ச்சிக்கான நிதியுதவி பற்றிய ஐ.நா. கருத்தரங்கில் பேசிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே இவ்வாறு கூறினார்.

இராணுவத்துக்கும் பிணையலிலிருந்து மீட்பதற்கும் செலவழிக்கப்படும் தொகையை வைத்துப் பார்க்கும் போது வளர்ந்த நாடுகளின் கூற்றில் உண்மையில்லை என்று தெரிகிறது என்றார் பேராயர் மிலியோரே.

மேலும் மக்கள், குறிப்பாக பெண்களும் சிறாரும் வியாபாரம் செய்யப்படுவது, உலக அளவில் சக்திவாய்ந்த தொழிலாக இருக்கின்றது என்று சொல்லும் இச்சர்வதேச கருத்தரங்கின் இறுதி அறிக்கை, ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கட்த்தல் ஆகிய குற்றங்களுக்குப் பின்னர், மனித வியாபாரம் உலகின் மூன்றாவது பெரிய குற்றமாக இருக்கின்றது என்றுரைத்தது.

விபச்சாரம் புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது என்றும் இது, ஏழ்மைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகுவோரைப் பயன்படுத்திச் செய்யும் உலகளாவிய தொழிலாகவும் இருக்கின்றது என்றும் அறிக்கை உரைத்தது.

இவர்கள் 21ம் நூற்றாண்டின் அடிமைகளாக மாறியுள்ளனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியது.

இவர்களுக்குத் தருச்சபை மிகுந்த அக்கறையுடன் பணியார்றி வருகிறது என்றும் பேராயர் மிலியோரே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.