2008-12-01 16:06:31

வன்முறையின் மத்தியில் சாந்தமுள்ளவர்களாக வாழ திருத்தந்தை அழைப்பு


டிச.01,2008. மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த அதேவேளை, பிரச்சனைகளுக்கு வன்முறைகள் தீர்வாகக் கருதப்படாத ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு மக்கள் அன்பும் சாந்தமும் உள்ளவர்களாக இருக்குமாறு ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு உரைத்த அவர், இந்தியாவின் மும்பையில் கொடூரமானப் பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த மற்றும் எந்த வழிகளிலும் புண்பட்டுள்ள அனைவருக்கான செபத்தில் தானும் இணைவதாகக் கூறினார். இத்தகைய செயல்களே, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளுக்கானத் தீர்வு என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருப்போரின் இதயங்களை இறைவன் தொட வேண்டும் என்று அனைவரும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார். கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு விசுவாசிகள் அன்பும் சாந்தமும் நிறைந்த வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாக இருக்குமாறு ஊக்கப்படுத்தினார். இன்னும் ஆப்ரிக்காவின் நைஜீரிய நாட்டு ஜோசில், தேர்தல் சம்பந்தமான தேர்தலில் வன்முறைக்கும் திருத்தந்தை தமது கண்டனத்தைத் தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.