2008-12-01 19:51:24

கத்தோலிக்க ஆர்த்தோடாக்ஸ் உறவுகளின் முன்னேற்றத்தைத் திருத்தந்தை பாராட்டுகிறார் . 01 டிச. 08.

 


திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இந்த ஆண்டு மூன்று முறை ஆர்த்தோடாக்ஸ் சமயத்தின் கான்ஸ்டான்டிநோபிள் பிதாப்பிதா பர்த்தலோமேயுவைச் சந்தித்திருக்கிறார் . இது உறவுகள் ஆழமாவதைக் காட்டுகிறது எனத் திருத்தந்தை கூறியுள்ளார் . நாம் நம் உறவுகளை வலுப்படுத்த அருள் ஈந்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் . நம் சகோதர உறவுகள் செபத்தால் வலுவடைந்துள்ளன என இஸ்தான்புல்லில் இருக்கும் ஆர்த்தோடாக்ஸ் சபையின் தலைவருக்குத் திருத்தந்தை செய்தி அனுப்பியுள்ளார் . நவம்பர் 30 ஆம் நாள் கான்ஸ்டான்டிநோபிளின் பாதுகாவலர் புனித அந்திரேயா திருநாளில் அங்கு திருத்தந்தையின் தூதராக விழாவில் பங்கேற்கச் சென்ற திருப்பீடத்தின் கிறிஸ்துவ ஒன்றிப்புக்கான மன்றத் தலைவர் கர்தினால் வால்டர் காஸ்பர் வழியாகத் திருத்தந்தை அவரது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார் . பிதாப்பிதாவின் வருகையால் மூன்றுமுறை அவர் ஆசிபெற்றதாகத் திருத்தந்தை தெரிவித்திருக்கிறார் .








All the contents on this site are copyrighted ©.