2008-12-01 20:18:39

ஈராக்கில் நிலையற்ற தன்மை நிலவுகிறது என்கிறார் பேராயர். 01 டிசம்பர், 08.


அமெரிக்க ஐ.நாடு 2011 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முத்தாய்ப்பாக வெளியேற ஈராக்கின் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது . இது ஒரு படி முன்னேற்றம் என்றாலும் ஈராக் நாடு இன்னும் பிளவுகளையும் பேராபத்துக்களையும் கொண்டிருப்பதாக ஈராக்கின் கிர்க்குக் மறைமாவட்டக் கல்தேயப் பேராயர் லூயிஸ் சாக்கோ சென்ற மாத இறுதியில் கூறியுள்ளார் . தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேச இயலாத நிலையில் உள்ளோம் என்பதை அரசும் அறிந்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனிப் பிரிவுகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன . அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவம் ஈராக்கிலிருந்து ஜூன் மாதம் 2009 ஆண்டில் விலக்கிக்கொள்ளப்பட பாராளுமன்றத்தில் சென்ற மாதம் 27 ஆம் தேதி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது







All the contents on this site are copyrighted ©.