2008-11-29 15:03:56

மனிதனின் மாண்பு மதிக்கப்படாவிட்டால் தற்போதைய உலகளாவிய பொருளாதாரப் பிரச்சனை பேரழிவாக மாறும் - திருப்பீடம் எச்சரிக்கை


நவ.29,2008. மனிதனின் மாண்பு மதிக்கப்படாவிட்டால் தற்போதைய உலகளாவிய பொருளாதாரப் பிரச்சனை பேரழிவாக மாறும் என்று திருப்பீடம் எச்சரித்துள்ளது.

கத்தார் நாட்டு தோஹாவில் இன்று தொடங்கியுள்ள வளர்ச்சிக்கான நிதியுதவி பற்றிய ஐ.நா. கருத்தரங்கு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஐ.நா. வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே, தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள், பொருளாதாரம், உணவு, எரிசக்தி ஆகிய பிற பிரச்சனைகளைப் பாதிப்பதற்கு அனுமதித்தால் விரைவில் ஒரு பேரழிவை சந்திக்க நேரிடும் என்றார்.

பிரச்சனைகளுக்கான தீரிவுகளைக் காண்பதில் ஒத்துழைப்பும் ஐக்கியமும் தேவை என்றும் பேராயர் கூறினார்.

தற்போதைய உலகளாவிய பிரச்சனை நன்னெறிகளோடு தொடர்புடையவை என்றும் உரைத்த அவர், இது தலைமைத்துவம், குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பொறுப்புடைய அரசுகளின் ஒழுக்கநெறி அதிகாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது என்றும் தெரிவித்தார்.

192 ஐ.நா.உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த ஐ.நா. கருத்தரங்கு வருகிற செவ்வாய் வரை நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.