2008-11-29 15:01:55

கியூபா கம்யூனிச நாட்டில் முதல் முத்திப்பேறு பெற்ற பட்டம்


நவ.29,2008. கியூபாவில் இன்று புனித புனித இறைஅருளப்பர் மருத்துவசபையைச் சேர்ந்த அருட்சகோதரர் ஹோசே ஒலாலோ வால்டெஸ் என்பவர் முத்திப் பேறு பெற்றவர் என்று அறிவிக்கப்பட்டார்.

கியூபா கம்யூனிச நாட்டில் ஒருவர் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

1820 ல் பிறந்த இவர், பிறந்த ஒரு மாதத்திலேயே ஹவானா அனைதை இல்லத்தில் விடப்பட்டார்.

54 வருடங்கள் நோயாளிகள் மத்தியில் பணிசெய்த முத்திப்பேறு பெற்ற ஹோசே ஒலாலோ வால்டெஸ் நோயாளிகளின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த முத்திப்பேறு பெற்ற திருப்பலி அன்றைய நாளில் அந்நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும் கடந்த ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை, இந்த நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டு கியூப மக்களை, குறிப்பாக நோயாளிகள் மற்றும் நலப்பணியாளர்களை இறைவனின் பாதுகாப்பில் அர்ப்பணிப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 








All the contents on this site are copyrighted ©.