2008-11-28 17:14:41

துணிச்சலும் சகிப்புத்தன்மையும் கொண்ட மாநகரில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளதே என வருந்துகிறார் மும்பையின் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராஸியாஸ். 28,நவம்பர் ,08.


மும்பை மாநகரின் பேராயர் கர்தினால் கிராஸியாஸ் இந்தத் தாக்குதல்களை கண்டித்துள்ளார் . காயப்பட்டோருக்கு சிகிச்சைபுரிய மருத்துவ மையங்களைத் திறந்துள்ளார் . பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது ஆறுதலைத் தெரிவித்துள்ளார் . காவலர்களுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் தர முன்வந்துள்ளார் கர்தினால் கிராஸியாஸ் . அகில உலக மக்களையும் பாரத நாட்டுக்கு இவ்வேளையில் நெருக்கமான ஒத்துழைப்பைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் . மேலும் உணர்வில்லாத வன்முறைத் திட்டங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு இவ்வளவு கொடிய பாதகச் செயலைச் செய்துள்ளதாக கடுமையாக மனிதாபிமானமில்லாத இந்தச் செயலைக் கண்டித்துள்ளார் கர்தினால் கிராஸியாஸ் . பல்வேறு சமய மற்றும் கலாச்சாரங்களை சகிப்புத்தன்மையோடும் பாசத்தோடு அரவணைத்துக் கொள்ளும் மும்பையில் , சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களை தாக்கியிருப்பது நாணமில்லாத செயல் எனக் கர்தினால் கூறியுள்ளார் . உலக சமுதாயம் நன்மையால் தீமையைத் தோல்வியுறச் செய்து அமைதியை நிலை நாட்டவேண்டும் எனக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.