2008-11-28 17:17:39

அகில உலகக் கிறிஸ்தவச் சபைகளின் மன்றம் மும்பைத் தாக்குதல்களைக் கண்டிக்கிறது . 28,நவம்பர் ,08 .


டபிள்யூ சிசி என்னும் அகில உலகக் கிறிஸ்தவச் சங்கம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள மடலில் அகில உலகக் கிறிஸ்தவ சங்கத்தினர் அதிர்ச்சியும் ,ஆழ்ந்த வருத்தமும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது . அப்பாவி மக்களைக் குறிவைத்துள்ள இந்தக் காரணமில்லாத , ஒழுக்க நெறியற்ற , அடாவழியான வன்முறைகளை, பல இந்தியத் கிறிஸ்தவச் சபைகளைக் கொண்ட அகில உலகக் கிறிஸ்தவ மன்றம் , கடுமையாகக் கண்டிப்பதாகக் தெரிவித்துள்ளது. தாக்குதலால் இறந்தோர் குடும்பங்களுக்கும் , பாதிக்கப்பட்டோருக்கும் , இந்திய அரசுக்கும் , இந்திய மக்களுக்கும் , தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும் , வருத்தங்களையும் தெரிவித்துள்ளனர் . கடும் துயரமான , மோசமான இந்தவேளையில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் எங்கள் நெஞ்சில் நிறுத்தி எங்கள் மன்றாட்டுக்களைக் காணிக்கையாக்குகிறோம் எனத் தெரிவித்துள்ளனர் . மனித வாழ்வின் புனிதத்தை மதிக்கும் நாங்கள் அரசுக்களோடும் , நல்ல உள்ளம் கொண்டோரோடும் இணைந்து சமுதாயத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் வேறுபாடுகள் இன்றி கட்டி எழுப்ப எங்களையே அர்ப்பணித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.